அக்டோபர் 15ஆம் தேதி உலக கைகள் கழுவும் தினம்: ஏழை மக்களுக்கு இலவசமாக சோப்பு வழங்க சோப்பு வங்கி பெட்டி தொடக்கம்

0 1356

கை கழுவுதலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் 15 ஆம் தேதி உலக கைகள் கழுவும் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் மற்றும் நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், ஏழை மக்களுக்கு இலவசமாக சோப்பு வழங்க சோப்பு வங்கி பெட்டி திட்டத்தை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments