தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2982
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம் நீலகிரி, கோவையில் மிக கனமழையும், சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 3 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில்அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments