குன்றத்தூர் ஒன்றியத்தில் திமுக - அதிமுக சார்பில் வெற்றிப்பெற்ற 3 தம்பதிகள் ஊராட்சி மன்ற தலைவர் - ஒன்றிய கவுன்சிலராக தேர்வு..!

0 1695

உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், திமுக-அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக சார்பில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலதியும், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது கணவர் ஏசு பாதமும் வெற்றி பெற்றனர்.

அதேப்போல், திமுக சார்பில் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலராக மனோகரனும், 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அவரது மனைவி சரஸ்வதியும் வெற்றிப் பெற்றனர்.

திமுக சார்பில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ் அமுதனும், 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது மனைவி மலர்விழியும் வெற்றி பெற்றனர்.  

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments