விமானத்தில் பயணம் செய்யும் சிறுமி... தந்தையே பைலட்டாக வந்ததால் உற்சாகம்..!

0 3719

விமானத்தில் பயணம் செய்த சிறுமி, அந்த விமானத்தில் பைலட்டாக இருந்த தனது தந்தையை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shanaya Motihar என்ற அந்த சிறுமி டெல்லி செல்வதற்காக தனது தாயுடன் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தார். கையில் டிக்கெட்டுடன் இருக்கை மீது ஏறி நின்று ஒரு வித ஆச்சரியத்துடன் விமானத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமி, பைலட்டுக்கான உடை அணிந்து அங்கு நின்று கொண்டிருந்த தனது தந்தையை கண்டு மகிழ்ச்சியடைந்தார். பின்னர், தந்தையை மழலை குரலில் அப்பா என அழைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

இந்த காட்சியை அந்த சிறுமியின் தாய் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments