கொடுத்த பணத்துக்கு குறைவான அளவில் பெட்ரோல்.. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.யிடம் நூதன முறையில் பெட்ரோல் திருடி மோசடி..!

0 1693
கொடுத்த பணத்துக்கு குறைவாக பெட்ரோல் போட்டு மோசடி?

சென்னை வில்லிவாக்கத்தில் கொடுத்த பணத்துக்கு குறைவான அளவில் பெட்ரோல் போட்டு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.யிடமே நூதன முறையில் பெட்ரோல் திருடி மோசடியில் ஈடுபட்டதாக பங்க் நிர்வாகம் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. லவக்குமார், வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையிலுள்ள நவீன் எண்டர்பிரைஸ் பாரத் பெட்ரோல் பங்கில் 250ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பெட்ரோல் போட்டுவிட்டு சில மீட்டர் தூரம் சென்றபிறகு பைக்கில் பெட்ரோல் குறியீட்டு முள் குறைவாக காண்பித்துள்ளது.

சந்தேகமடைந்த டிஎஸ்பி மீண்டும் பங்கிற்கு வந்து அது குறித்து கேட்டதோடு, ஊழியர்கள் கண் முன்னே தனக்கு வழங்கப்பட்ட பெட்ரோலை அளந்து பார்த்துள்ளார். அப்போது, 250 ரூபாய்க்கான பெட்ரோல் அளவில் 800 மில்லி குறைந்திருந்தது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments