ஊரக உள்ளாட்சித் தேர்தல் .. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி..!

0 2046
ஊரக உள்ளாட்சித் தேர்தல் .. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கோட்டூர் ஊராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றதையடுத்து, வேட்பாளர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உள்ளாட்சித் தேர்தலில், பெருங்கோட்டூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முருகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சின்னத்தாய் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

15ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்றதால், அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments