பாம்பை கடிக்க வைத்து கொலை.. கொடூர கணவனுக்கு நீண்ட நாள் சிறை.!

0 3458

கேரளாவில், பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளி சூரஜுக்கு கொல்லம் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

கொலை, கொலை முயற்சி, தடையங்களை அழித்தல், விஷம் மூலம் கொல்லுதல் என 4 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் ஆறாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மனோஜ் தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளி சூரஜுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் திருமணம் செய்ய தடையாக இருக்கிறார் என்பதற்காக மனைவி உத்ராவை சூரஜ் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்திருக்கலாம் என உத்ராவின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.

அதை தொடர்ந்து  விசாரணை நடத்திய போலீசார்,சூரஜை கைது செய்து  அவன் மனைவியை பாம்பால் கடிக்க வைத்து கொன்றதை நீதிமன்றத்தில் நிரூபித்தனர். பாம்பாட்டி அரசுத் தரப்பு சாட்சியாக மாறியது வழக்கில் விரைந்து தீர்ப்பு கிடைக்க காரணமாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments