350 சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருகிறது BMW

0 6295
350 சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருகிறது BMW

இந்தியாவிலேயே விலை அதிகமானதும், முற்றிலும் வெளிநாட்டிலேயே உருவாக்கப்பட்டதுமான 350 சிசி மேக்சி ஸ்கூட்டரை BMW விற்பனைக்கு கொண்டு வருகிறது.

BMW C400 GT என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டருக்கு இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒன்பதரை விநாடிகளில் பூஜ்யத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடியது என்றும் அதிகபட்ச வேகம் 139 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும் BMW தெரிவித்துள்ளது.

இரட்டை LED முகப்பு விளக்குகளுடன் சொகுசான பயணத்திற்கு ஏற்ற வகையில் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறரை இஞ்சு TFT தொடுதிரை கனக்டிவிட்டி, உயரமான வின்ட்ஷீல்டு உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டுள்ளன.

Alphine white நிற ஸ்கூட்டருக்கு 9 லட்சத்து 95 ஆயிரமும், Style Triple Black நிற ஸ்கூட்டருக்கு 10 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் எக்ஸ்-ஷோரூம் விலை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments