முந்திரித் தொழிற்சாலை தொழிலாளி கொலை வழக்கு ; கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

0 1625
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிக் கடலூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முந்திரித் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் கோவிந்தராஜை அடித்து, விஷம் ஊற்றிக் கொன்றதாக ஆலை உரிமையாளரும் கடலூர் எம்பியுமான ரமேஷ் மற்றும் 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

5 பேரைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில், திங்களன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார். கடலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்காக அவரை 2 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments