கரும்புக்காக லாரியை குட்டியுடன் வழிமறித்த காட்டு யானை...!

0 1776

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கரும்பு லாரியை தனது குட்டியுடன் வழிமறித்த காட்டுயானை, கரும்புகளை உருவி சாப்பிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி சென்றுக்கொண்டிந்த லாரியை, காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே யானை ஒன்று வழிமறித்தது. ஓட்டுநர் லாரியை பின்நோக்கி இயக்கியும் விடாத யானை, லாரியில் இருந்த சில கரும்புகளை தும்பிக்கையால் உருவி சாப்பிட்டது.

இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments