கனடா, மெக்சிகோவுடன் தரைவழிப் போக்குவரத்தை நவம்பரில் தொடங்கும் அமெரிக்கா

0 2452

கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான நில எல்லையை 19 மாதங்களுக்குப் பின் பயணிகள் போக்குவரத்துக்காக நவம்பரில் திறப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ நாடுகளுடனான எல்லைகளை அமெரிக்கா மூடியது. அதன்பின் இன்றியமையாப் பொருட்களைக் கொண்டுசெல்லவும், இன்றியமையாப் பணிகளுக்குச் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர் நவம்பர் முதல் கனடா, மெக்சிகோ நில எல்லை வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments