கோவையில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி..!

0 18687

கோவையில் தெருவில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் பறிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

கோவை சரவணம்பட்டி அடுத்த நியூ வசந்தம் நகர் பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில்  வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயற்சி செய்தும் முடியாமல் போகவே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments