ராசிபுரத்தில் வாக்களிக்க வேண்டாம் என கூறிய வேட்பாளருக்கு 24 வாக்குகள்..!

0 3894

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் தனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாமென பிரச்சாரம் மேற்கொண்டவருக்கு 24 வாக்குகள் கிடைத்துள்ளன. 

வெண்ணந்தூர் ஊராட்சியில்  6வது வார்டு மாவட்ட கவுன்சிலர்  இடைத்தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் 43 ஆயிரத்து 464 வாக்குகள் பதிவான நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதற்கிடையில்  அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட  ரமேஷ் என்பவர், காந்தி வேடம் பூண்டு தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் தான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழலை, ஒழித்து விடுவேன் என்றும் கூறி பிரச்சாரம் செய்தார். மேலும் லஞ்சம், ஊழல் ஆட்சி வேண்டுமென்றால் தனக்கு மறந்தும் கூட வாக்களிக்க வேண்டாம் என்று துண்டு பிரசுரங்களையும் மக்களிடம் அவர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments