பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? புலியை வைத்து கண்டுபிடித்த தம்பதி..!

0 3957

துபாயில் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிவதற்காக ஒரு தம்பதியினர் புலியினை பயன்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது. 

துபாயைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்வதற்காக விழா ஒன்றை நடத்தினர். இதற்காக கடற்கரைப் பகுதியில் இரு வண்ணப் பொடிகள் அடங்கிய பலூன்களை அந்த தம்பதியினர் வானில் பறக்க விட்டனர். 

பின்னர் அந்த பலூனை பிடிக்கும் நிகழ்ச்சியில் நிஜ புலியே பயன்படுத்தப்பட்டது. கடற்கரை மணல் பகுதியில் நடந்து சென்ற அந்த புலி  வானில் பறந்த பலூன்களில் ஒன்றினை கவ்வி பிடித்த போது, அது வெடித்து பிங்க் நிற பொடி வெளியானது. இதன் மூலம் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று அந்த தம்பதியினர் நம்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments