புதுச்சேரியில் போலீசார் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய இளைஞன் கைது..!

0 1076

புதுச்சேரியில் வாகன விபத்தை விசாரிக்க சென்ற காவலரை குடி போதையில் இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

மங்களம் பகுதியை சேர்ந்த வினாயகம் என்பவர் வில்லியனூர் மேற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மதகடிப்பட்டில் பணியில் இருந்த விநாயகம் அப்பகுதியில்  டாடா ஏஸ் மற்றும் இரு சக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து விசாரிக்க சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் குடிபோதையில் இருந்ததை படம் எடுக்க முயன்ற வினாயகத்தை அவர்கள் திட்டி சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக தன்ராஜ் என்பவனை கைது செய்த போலீசார் வினோத்தை  தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments