முன்னாள் போக்குவரத்து ஆணையரின் பி.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை..!

0 1620

முன்னாள் போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளரின் வீட்டில் இருந்து 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 190 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, முன்னாள் போக்குவரத்து ஆணையரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் மற்றும் அவரது 2வது மனைவி ராஜேஸ்வரிக்கு சொந்தமான 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

விருகம்பாக்கம், திருப்பரங்குன்றம் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. ராஜேஸ்வரிக்கு சொந்தமான வங்கி லாக்கரிலும் சோதனை நடந்தது.

இதன் முடிவில் 84 லட்சத்து 73 ஆயிரத்து 120 ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 190 சவரன் தங்க நகைகள்,  2ஆயிரத்து 468 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 43 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments