நவராத்திரியின் ஏழாவது நாள்- மகா சப்தமி கொண்டாட்டம்..!

0 934

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் நிலையில் ஏழாவது நாளை மகா சப்தமி என்று மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நவராத்திரி பண்டிகை நேற்று ஏழாவது நாளாக சப்தமி என விசேஷமாகக் கொண்டாடப்பட்டது. திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் மக்கள் வீதிகளில் கோவிட் முன்னெச்சரிக்கையுடன் முகக் கவசங்கள் அணிந்து பூஜைக்கான பொருட்களை வாங்கத் திரண்டிருந்தனர்.கொல்கத்தாவில் நவராத்திரி பண்டிகை பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது. துர்க்கை அம்மனுக்கு ஆராதனைகள் நடைபெற்றன.

ஒடிசா மாநிலம் பூரியில் துர்க்கை அம்மன் முகத்தை ஒரு கைவினைக் கலைஞர் ஐஸ்கிரீம் குச்சிகளால் அழகாக வடிவமைத்திருந்தார். சிறு குச்சியையும் கலைப்பொருளாக்கலாம் என்று விளக்கியது இக்காட்சி இதனிடையே பூரி கடற்கரையில் நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனின் மணல் சிற்பம் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் 24 பாரகனாஸ் பகுதிகளில் அமைக்கப்பட்ட துர்க்கை அம்மன் பந்தல் கடலோரம் வாழும் மக்களின் வாழ்க்கையை சித்தரித்தது.தெலுங்கானாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத 45 அடி துர்க்கை அம்மன் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments