உள்நாட்டு விமானங்களை அக்.18 முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதி

0 1034

உள்நாட்டு விமானங்களை வரும் 18ம் தேதி முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 9ம் தேதி 2 ஆயிரத்து 340 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், திட்டமிட்டபடி வரும் 18ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வரை 2 ஆயிரத்து 340 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.   பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க முழு அளவில் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments