நேபாளத்தில் மலைச்சரிவில் பேருந்து உருண்டு விழுந்து விபத்து... 28 பேர் உயிரிழப்பு

0 1458

நேபாளத்தில் மலைச்சரிவில் பேருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு பாங்கே மாவட்டத்தில் இருந்து முகு பகுதிக்கு 45 பேருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் சென்ற போது பேருந்தின் முன் பக்க டயர் திடீரென பஞ்சர் ஆனதால் பேருந்து நிலைதடுமாறி மலைச்சரிவில் உருண்டு விழுந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். நிகழ்விடத்தில் மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments