விஜயதசமி நாட்களில் சிறப்பு வழிபாடுகளுக்காக கோவில்கள் திறக்கப்படுமா?... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!

0 2422

தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்ட உள்ளது.

விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments