23 வயதில் ஊராட்சி மன்ற தலைவர்.. இளம் பெண் தலைவருக்கு குவியும் வாழ்த்துகள்..!

0 2373
இளம் பெண் தலைவருக்கு குவியும் வாழ்த்துகள்

ஆசியாவிலேயே பரப்பளவில் மூன்றாவது மிக பெரிய ஊராட்சி என்று கூறப்படும் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் முதன் முறையாக 23 வயது இளம்பெண் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வில்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 23 வயதான பாக்கிய லெட்சுமி என்ற பெண், 2 ஆயிரத்து 312 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கொடைக்கானல் மலை பகுதிகளில் முதன் முறையாக இளம்வயதில் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments