இந்திய அணியின் ஆலோசகராக இருப்பதற்கு தோனி ஊதியம் பெற வில்லை - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

0 3665
இந்திய அணியின் ஆலோசகராக இருப்பதற்கு தோனி ஊதியம் பெற வில்லை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கேப்டன் தோனி, அதற்காக ஒரு ரூபாய் கூட ஊதியமாக பெறவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அணிக்கு சேவை செய்ய தோனி ஒப்புக் கொண்டதற்காக கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவிப்பதாக கூறினார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 24 ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி, ஆலோசகராக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் இணைய இருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments