பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்

0 17152
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. 1965ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் அறிமுகமானார்.

தங்கப்பதக்கம், பைரவி, பாமா விஜயம், எதிர்நீச்சல், காசேதான் கடவுளடா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் எம்ஜிஆருடன் அவர் இணைந்து நடித்ததில்லை. சுமார் 50 படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பங்களிப்பை அளித்துள்ள ஸ்ரீகாந்த் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments