வாக்குச் சீட்டுகளை பாக்கெட்டில் போட்டுச் சென்ற ஆசாமி.. சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர்..!

0 1977
வாக்குச் சீட்டுகளை பாக்கெட்டில் போட்டுச் சென்ற ஆசாமி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வாக்குச்சீட்டுகளை ஒருவர் பாக்கெட்டில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அதனைக் கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெமிலி ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பனப்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. அப்போது மர்ம நபர் ஒருவன், வாக்குச்சீட்டுகள் சிலவற்றை பண்டலாக எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நழுவியதாகக் கூறப்படுகிறது.

போலீசார் அவனை மடக்கிப் பிடித்து வாக்குச்சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments