மரக்கன்றுகள் நடும் பணி ஏலம் விடுவதில் முறைகேடுகள்.. தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

0 1369
தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி ஏலம் விடுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்ததாகவும் அதில் தமிழ்நாடு அரசு வனத்தோட்டக் கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து பெக்சல் நகரிலுள்ள வனத்தோட்ட கழக மண்டல மேலாளர் நேசமணியின் வீட்டில் இன்று காலை தொடங்கி, 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments