லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம்... சாலையில் சறுக்கி விழுந்த தம்பதி லாரியில் சிக்கிய பதபதைக்கும் சிசிடிவி காட்சி..!

0 2900
சாலையில் சறுக்கி விழுந்த தம்பதி லாரியில் சிக்கிய பதபதைக்கும் சிசிடிவி காட்சி

ஈரோட்டில் லாரியை இடதுபுறமாக முந்தி செல்ல முயன்ற ஸ்கூட்டி திடீரென நிலைத்தடுமாறியதில் கீழே விழுந்த தம்பதி மீது அந்த லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தரம் - மோகனலட்சுமி தம்பதி ஈரோட்டுக்கு ஸ்கூட்டியில் வந்தனர். பார்க் சாலை வழியாக வந்த அவர்கள் முன்னே சென்ற லாரியை இடதுபுறமாக வேகமாக முந்தி செல்ல முயன்ற நிலையில், சாலை விளிம்பில் பைக் சறுக்கி இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, அருகே வந்து கொண்டிருந்த லாரியின் பின்சக்கரம் கணநேரத்தில் மோகனலட்சுமி மீது ஏறி இறங்கியது. இதில், மோகனலட்சுமி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், கணவர் சுந்தரம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

முன்னால் சென்ற பைக் திடீரென எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கியதால், பின்னால் அடுத்தடுத்து இரு பைக்குகளில் வந்தவர்களும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments