ஷாம்பு வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய சிறுவன் பாம்பு கடித்து உயிரிழப்பு.. தூத்துக்குடியில் சோகம்..!

0 12146

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 வயது சிறுவன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜமீன் கோடாங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிச்செல்வம் என்ற அந்த சிறுவன், இரவு அருகிலுள்ள கடைக்குச் சென்று ஷாம்பு வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளான்.

தெருவிளக்கு இல்லாத பகுதி வழியே கடந்து வந்தவன், திடீரென வீறிட்டு அலறி கீழே விழுந்துள்ளான்.

அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது சிறுவனின் காலில் பாம்பு கடித்ததற்கான தடயம் காணப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாரிச் செல்வம், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments