டெல்லியில் கைதான பயங்கரவாதி முகம்மது அஷ்ரப்பை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

0 1377
டெல்லியில் கைதான பயங்கரவாதி முகம்மது அஷ்ரப்பை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

டெல்லியில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி முகம்மது அஷ்ரப்பை, 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கிழக்கு டெல்லியின் லெஷ்மி நகரில் போலி பெயரில் இருந்த அவனை சிறப்பு பிரிவு போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி, மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கைது நடவடிக்கையால், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் இருக்கும் பயங்கரவாதி முகம்மது அஷ்ரப், சீலிப்பர் செல் போன்று செயல்பட்டுள்ளான். பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ மூலம் மேற்குவங்கத்தின் சிலிகுரி - வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் அவன் அனுப்பப்பட்டுள்ளான்.

பல போலி அடையாள அட்டைகளைப் பெற்றிருப்பதுடன், ஆவணங்களைப் பெறுவதற்காக உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments