சேற்றில் சிக்கிய நாய் குட்டி.. தன் குட்டியை காப்பாற்ற பாச போராட்டம் நடத்திய தாய் நாய்..!

0 1592
தன் குட்டியை காப்பாற்ற பாச போராட்டம் நடத்திய தாய் நாய்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, சேற்றில் சிக்கிய தன் குட்டியை, தாய் நாய் காப்பாற்றி தூக்கி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

வாளரக்குறிச்சி கிராமத்தில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், நேற்றிரவு பெய்த மழையால் அங்கு சேறும் சகதியுமாக உள்ளது. அந்த பள்ளத்தில், குட்டி நாய் ஒன்று தவறி விழுந்து மேலே வர போராடியது.

அதனை பார்த்த தாய் நாய், சேற்றில் இருந்த தனது குட்டி நாயின் வாலை பிடித்து காப்பாற்றி மேலே இழுத்து வந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments