ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. திமுக அதிகமான இடங்களில் முன்னிலை..!

0 7791
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. திமுக அதிகமான இடங்களில் முன்னிலை..!

கட்சிகள் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர்
திமுக + 122 819
அதிமுக + 03 164
 மற்றவை  01 122

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமுள்ள பதவியிடங்களில் போட்டியின்றி தேர்வானவர்கள் போக, மீதமுள்ள 23978 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சை சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டனர்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரிய ஆரம்பித்தன. ஓட்டுச்சீட்டு முறை என்பதால் ஓட்டுக்களை தனித்தனியாக பிரித்து எண்ணியதால் முன்னணி நிலவரங்கள் தெரிய தாமதம் ஆகின. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என இரு பதவிகளிலுமே ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க. தான் முன்னிலையில் இருந்து வருகிறது. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒற்றை இலக்க எண்களிலேயே முன்னிலையில் இருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 138 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 122 இடங்களில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலையில் இருக்கின்றன. அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.

பா.ம.க. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் உள்ள 1,375 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 824 இடங்களில் தி.மு.க. முன்னிலை வகிக்கும் நிலையில், 166 இடங்களில் அ.தி.மு.க. முன்னிலையில் வகிக்கிறது. பா.ம.க. 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments