ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டிற்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி தோல்வி

0 2949

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகி ஒரு ஓட்டும் தேமுதிக நிர்வாகி இரண்டு ஓட்டுகள் மட்டுமே பெற்றும் தோல்வியடைந்துள்ளனர்.

9வது வார்டில் மொத்தம் உள்ள ஆயிரத்து 551 வாக்குகளில் 913 வாக்குகள் பதிவாயின. இதில் திமுக நிர்வாகி அருள்ராஜ் 387 வாக்குகளும் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளும் அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம் 196 வாக்குகளும் பெற்றனர்.

பாஜக நிர்வாகியான கார்த்திக் என்பவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். தேமுதிக நிர்வாகி இரவிக்குமார் என்பவர் 2 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்.

பாஜக நிர்வாகி கார்த்திக் 4வது வார்டைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவர் 9வது வார்டில் போட்டியிட்டதால், அவருடைய குடும்பத்தினர் கூட வாக்களிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments