செல்போனை வாங்கிவிட்டு பணம் தராமல் அலைக்கழித்ததால் ரௌடி வெட்டிக் கொலை

0 4667

சென்னை மணலி அருகே 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனுக்காக ரௌடி ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான்.

சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்த இராஜசேகர் என்ற அந்த நபர், 3 மாதங்களுக்கு முன் தனது நண்பனான விக்னேஷ் என்பவனிடம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போன் ஒன்றை வாங்கியுள்ளான்.

பணத்தை பிறகு தருவதாகக் கூறி வாங்கியவன், இடையில் ஒரு கொலை முயற்சி வழக்கில் சிறை சென்றுவிட்டு 2 மாதங்கள் கழித்து ஜாமீனில் வந்துள்ளான்.

நேற்றிரவு இராஜசேகரோடு அமர்ந்து மது அருந்தும்போது, செல்போனையோ, பணத்தையோ தருமாறு விக்னேஷ் கேட்டுள்ளான்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் இராஜசேகரை விக்னேஷ் குத்திக் கொன்ற நிலையில், போலீசார் அவனை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments