அடுத்தடுத்து 2 நகைக்கடைகளின் பூட்டுகளை உடைத்து 15 சவரன் நகை திருட்டு ; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

0 1388
அடுத்தடுத்து 2 நகைக்கடைகளின் பூட்டுகளை உடைத்து 15 சவரன் திருட்டு

கன்னியாகுமரி அருகே அடுத்தடுத்து இரண்டு நகைக் கடைகளின் பூட்டுகளை உடைத்து 15 சவரன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நித்திரவிளையில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான ரெத்தினா ஜுவல்லரியில் அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் புகுந்து நகைகளைத் திருடியுள்ளான். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் திருடன் கடைக்குள் வந்து சென்றது பதிவாகி இருந்தது.

இந்தக் கடைக்கு அருகிலேயே உள்ள விஸ்வம் ஜுவல்லரி என்ற கடைக்குள்ளும் புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 2 கடைகளிலும் சேர்த்து, 15 சவரன் நகை திருடப்பட்டிருப்பதாகக் கூறும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments