கோவில் நகைகளை உருக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, விசாரணையை தள்ளிவைத்த நீதிபதிகள்

0 1408

தமிழக கோவில்களின் நகைகள் 1977 ம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்து,  ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் அரசுக்கு வட்டி வருவாய் கிடைப்பதாக  தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோவில்களின் 2 ஆயிரத்து 137 கிலோ நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

கோவில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பன குறித்து பதிவேடுகள்  இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வாதிட்டது.

கோவில் நகைகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதுதொடர்பான அரசாணையையும் அவர் தாக்கல் செய்தார்.இதையடுத்து, கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதியளித்த நீதிபதிகள் விசாரணையை  தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments