தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி என்பவர் வெற்றி..!

0 2560

கடலூர் மாவட்டம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி என்பவர் வெற்றி பெற்றார்.

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரான் என்பவர் காலமானதை அடுத்து, அந்த பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதில், ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகூரானின் மனைவி மகாவதி உட்பட 4 பேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 828 வாக்குகளில் மகாவதி 268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலையரசி 266 வாக்குகளை பெற்ற நிலையில், 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி வெற்றி பெற்றார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments