வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

0 2161

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவையில் மிக கனமழையும், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் டெல்டா பகுதிகள் உள்பட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினமும் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments