2 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார், இளையோருக்கு கோவேக்சின் தடுப்பூசி போட வல்லுநர் குழு ஒப்புதல்

0 5001

2 முதல் 18 வயது பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசியை போடலாம் என  மத்திய அரசின் தடுப்பூசி நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பிரிவினரிடம் நடத்தப்பட்ட கோவாக்சின் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை, தடுப்பூசி நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது.

அதை ஆராய்ந்த பின்னர், சோதனை முடிவுகள் திருப்திகரமாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால், 2 முதல் 18 வயது பிரிவினருக்கு அதை செலுத்தலாம் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு  தடுப்பூசி நிபுணர் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

அதன் அடிப்படையில்  தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விரைவில் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments