வாக்கு எண்ணிக்கை துவங்க தாமதம்... அசந்து தூங்கிய அரசு ஊழியர்..!

0 2197

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்க தாமதமானதால், தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர் அசந்து தூங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

வாக்கு பெட்டிகளை ஊராட்சி வாரியாக மேஜைகளில் அடுக்கி வைத்து, வாக்கு எண்ணிக்கை துவங்க 11 மணி ஆகிவிட்ட நிலையில், காலை 8 மணியில் இருந்தே மையத்தில் காத்திருந்த தேர்தல் பணியாளர்களில் சிலர் அசந்து களைப்புடன் காணப்பட்டனர். அதில் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தவாறே உறங்கினார்.

அத்தோடு, அதே மையத்தில் தபால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி மாயமானதால் வாக்கு பெட்டி கட்டிங் பிளேடு வைத்து உடைத்து திறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments