சீமானுக்கு மிரட்டல்... அசம்பாவிதங்களை தவிர்க்க, காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

0 2241

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காங்கிரசார் குறித்து சீமான் விமர்சனம் செய்தால், சீமானின் நாக்கை அறுத்துவிடுவேன் என்றும், அவரை வெட்டுவேன் என்றும் வட சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் என்பவர் ஆவேசமாகவும், பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியியதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், திரவியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க பூண்டி தங்கம்மாள் தெருவிலுள்ள திரவியம் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments