வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு... சாலைகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு..!

0 1389

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே, கனமழை காரணமாக வெள்ளாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கடலூர்- அரியலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களை இணைக்கும் இரண்டு சாலைகள் தண்ணீரில் மூழ்கின.

செம்பேரி, தெத்தேரி கிராமத்தை இணைக்கும் சாலையும், செளந்திரசோழபுரம் வழியாக கோட்டைக்காடு கிராமத்தை இணைக்கும் சாலையும் வெள்ளத்தில் மூழ்கின.

அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் மக்கள், சௌந்திரசோழபுரம் கோட்டைக்காடு இடையே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments