அப்பாவி மக்களின் கொலைக்கு காரணமான தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை..!

0 2302

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் விடிய விடிய நடந்த என்கவுன்டரில் TRF என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனுக்கு, சாலையோர வியாபாரி ஒருவரின் கொலையில் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோபியான் மாவட்டத்தின் துல்ரான், இமாம்சாஹிப் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு அவர்களை தேடும் பணி நேற்றிரவு துவங்கியது.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கரே தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்த TRF அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments