போஸ்பரா வனப்பகுதியில் T23 புலி நடமாடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தகவல்..!

0 2089

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நம்பிகுன்னு பகுதியில் T23 புலி நடமாட்டம் தென்பட்டதால், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் 17 நாட்களாக தேடப்பட்டு வந்த T23 புலி, 13 ஆண்டுகளாக தான் வாழ்ந்து வந்த போஸ்பரா வனப்பகுதியில் நடமாடி வந்தது வனத்துறை பொருத்தியிருந்த தானியங்கி கேமராவில் பதிவானது.

அதன் அடிப்படையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

முதுமலை வன பகுதிக்கு உட்பட்ட முதுகுளி, நாகம்பள்ளி கிராம மக்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments