லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை ஆணையர்..!

0 2299

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் எம்.சாமிநாதன் என்பவர் துணை ஆணையராகவும், அலுவலக மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தஞ்சாவூர்- நாஞ்சிக்கோட்டை சாலை ராஜராஜன் நகரைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் தனது பெயரிலும் தாயார் பெயரிலும் உள்ள 3 மனைகளை வரைமுறைப்படுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்திருந்தார். இதனை பரிசீலித்த சாமிநாதன் மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் அளிக்க 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments