9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்கு எண்ணிக்கை நிலவரம்..!

0 17046
கட்சிகள் மாவட்ட கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர்
திமுக + 93 222
அதிமுக + 04 35
 மற்றவை  -  21

 

 

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.

ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில், வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்கு சீட்டுகளில் ஏதேனும் திருத்தம் செய்து விடக்கூடாது என்பதற்காக ஏஜெண்டுகள் பேனா கொண்டு செல்ல அனுமதியில்லை. பதிவான வாக்குகளை குறிப்பதற்காக பென்சில் மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தண்ணீர் பாட்டிலோ, வேறு எந்த பொருட்களோ கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. செல்போன்களை கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும், மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments