அமெரிக்காவில் பள்ளிக் கட்டிட பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து... 2 பேர் பலி

0 1671

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பள்ளி கட்டிட பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சான் டியாகோ நகரில் பறந்து கொண்டு இருந்த சி340 இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானம் தரையிறுங்குவதில் ஏற்பட்ட சிக்கலில் கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்புகள், பள்ளி சுற்றுப்பகுதி, வாகனங்கள் எரிந்து சேதமான நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் விபத்து குறித்து சிவில் விமான அமைச்சக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments