கர்நாடக மாநிலம் கலபுர்கியில் நிலநடுக்கம்... வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

0 2092

கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவானதாக புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலபுரகி நகரப் பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

கடந்த 11 நாட்களில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எல்லையோர மாவட்டமான கலபுர்கியில் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments