கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடிய பெண் மீது வழக்குப்பதிவு..!

0 4191

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கோவிலுக்குள் விதிகளை மீறி சினிமா பாடலுக்கு நடனமாடி சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள மகா காளிஸ்வர் கோவிலில் மனீஷா ரோஷன் என்ற இளம்பெண் பாலிவுட் சினிமா பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மனீஷா தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments