9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

0 1825

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.

3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 24,116 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் 74 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் என்ற அடிப்படையில், வாக்கு எண்ணிக்கையின் போது ஏஜெண்ட்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஒன்றிய வார்டு கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகியோரைத் தேர்வு செய்ய 4 வாக்குச் சீட்டுகளில் வாக்களித்துள்ளதால், அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பின்னர் எண்ணப்படும். பெரும்பாலான முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments