புதிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக உதவிகளை செய்யும் - பிரதமர் மோடி

0 2149

தொழில் துறை, இளம் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிக உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்கள் இணைந்து அமைத்த இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர், 21ஆம் நூற்றாண்டில் உலகை இணைப்பதில் விண்வெளித்துறை முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், தேவையற்ற பொதுத் துறைகளை தனியாருக்கு திறந்துவிட வேண்டும் என்பதே அரசின் கொள்கை என குறிப்பிட்டார்.

மேலும், விண்வெளித் துறையில் அனைத்து தொழில் நுட்பங்களையும் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments