லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு ; மத்திய அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

0 2104
மத்திய அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய இணை அமைச்சர் மகனை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா சனிக்கிழமை கைது செய்யப்பட்டர்.

இந்நிலையில் ஆசிஸ்மிஸ்ராவை 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் ஆசிஷ் மிஸ்ராவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிஷ் மிஸ்ராவை துன்புறுத்தக் கூடாது என்றும், விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதித்தும் உத்தரவிடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments